மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மோகன்லாலை கடவுள் ரேஞ்சுக்கு ஆராதிக்கும் இயக்குனர்களில் மலையாள இயக்குனர் உன்னிகிருஷ்ணனுக்குத்தான் முதலிடம் என்றே சொல்லலாம். மாடம்பி, கிரான்ட் மாஸ்டர், மிஸ்டர் பிராட் என தொடர்ந்து மோகன்லாலை வைத்தே படங்களை இயக்கிவரும் மலையாள இயக்குனர் உன்னிகிருஷ்ணன். தற்போதும் மோகன்லாலை வைத்தே தனது அடுத்த படத்தை துவக்கியுள்ளார்.
மோகன்லாலை எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்.. மோகன்லாலுக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக ஒலிப்பது இவரின் குரலாகத்தான் இருக்கும்.
இவர் மோகன்லாலை வைத்து இயக்கிய 'மாடம்பி' படம் தவிர மற்ற படங்களான கிரான்ட் மாஸ்டர் மற்றும் 'மிஸ்டர் பிராடு' ஆகிய படங்களில் மோகன்லாலின் கெட்டப்பில் ஒரு புதுமையை செய்ததோடு அதை தொடர்ந்து கடைபிடிக்கவும் செய்கிறார். மோகன்லாலை நரைத்த தலையுடன் ஒரு படத்திலும் நரைத்த தாடியுடன் இனொரு படத்திலும் காட்டியவர், இப்போது தான் இயக்கும் புதிய படத்திலும் அவரை நரைத்த தாடியுடனே தான் காட்ட இருக்கிறார்..
மோகன்லால் ஒரு எக்ஸ்-காப் என்பதுதான் இந்த கெட்டப்பிற்கு காரணம் என உன்னிகிருஷ்ணன் சொன்னாலும் கூட, இதை அவர் ஒரு சென்டிமென்ட்டாகவே ஆக்கிவிட்டார் என்றுதான் சொலவேண்டும். இந்தபடத்தில் நடிப்பதன் மூலம் தான் விஷாலும் ஹன்ஷிகாவும் முதன்முறையாக மலையாளத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.