‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கே.ஆர்.விஜயாவை புன்னகை அரசி என்பார்கள். சினேகாவை புன்னகை இளவரசி என்பார்கள். ஆனால் புன்னகை அரசி பட்டத்தோடு நடிக்க வந்திருப்பவர் அஞ்சலிராவ். 2014ம் ஆண்டு நடந்த தென்னிந்திய அழகிப் போட்டியில் சிறந்த புன்னகை அரசி என்ற டைட்டில் வென்றவர் அஞ்சலிராவ்.
தற்போது பீச்சாங்கை என்ற படத்தின் மூலம் சோலோ ஹீரோயின் ஆகியிருக்கிறார். இதற்கு முன்பு வன்மம் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாகவும், அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு தங்கையாகவும் நடித்திருந்தார். கரசா என்டர்டெயின்மென்ட் மற்றும் பி.ஜி.மீடியா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் காத்திக் என்ற புதுமுகம் ஹீரோ. எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, பியா பொன்முடி ஆகியோரும் நடிக்கிறார்கள். அசோக் என்ற புதுமுகம் இயக்குகிறார். பாலமுரளி பாலு இசை அமைக்கிறார், கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இடது கை பழக்கம் உள்ள ஒருவனுக்கு வரும் பிரச்சினைகள்தான் கதை.