நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
நடிகை ஜெயசித்ரா இயக்கிய நானே என்னுள் இல்லை படத்தில் நாயகனாக அறிமுகமானவர் அவரது மகன் அம்ரேஷ். அந்த படத்திற்கு தானே இசையும் அமைத்த அவர், தற்போது லாரன்ஸ் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா, பொட்டு படங்களைத் தொடர்ந்து திரிஷாவின் கர்ஜனை, பிரபுதேவாவின் யங் மங் சங் ஆகிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் அவர் இசையமைத்துள்ள பொட்டு படத்தின் ஆடியோ விழா மலேசியாவில் நடைபெற்றது. அப்போது அங்குள்ள ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கத்தில் அப்படத்தில் இடம்பெற்றுள்ள குலுக்கி பக்கத்துல என்று தொடங்கும் ஒரு பாடலை மலேசிய மொழியில் எழுதி மேடையில் பாடியிருக்கிறார் அம்ரேஷ். அப்போது அந்த பாடலுக்கு நடிகைகள் நமீதா, இனியா ஆகிய இருவரும் நடனமாடியிருக்கிறார்கள். அவர்களது ஆட்டத்தைப்பார்த்து குஷியடைந்த அம்ரேஷ், பாடலை பாடியபடியே தானும் அவர்களுடன் இணைந்து அதிரடி ஆட்டம் போட்டுள்ளார்.