'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திரைக்கு வராத கதை, கோடிட்ட இடங்களை நிரப்புக படங்களைத் தொடர்ந்து பொட்டு, ரெண்டாவது படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இனியா. மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்து வரும் அவர், அமீர் இயக்கி வரும் சந்தனத்தேவன் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அமீர் சொன்ன கேரக்டர் இனியாவுக்கு பிடித்து விட்டதாம். அதனால் அந்த கேரக்டருக்காக ஆன்ட்டி மாதிரி வெயிட் போட வேண்டும் என்று சொன்னதும் ஒரே மாதத்தில் வெயிட் போட்டு ஆன்ட்டி கெட்டப்பில் சென்னை திரும்புவதாக சொல்லிக்கொண்டு கேரளாவுக்கு விரைந்து சென்ற இனியா, அங்கு சென்றபிறகு பலமாக யோசிக்க ஆரம்பித்து விட்டாராம்.
அதாவது, வெயிட் போடுவது எளிதான விசயம்தான். ஆனால் பின்னர் அந்த வெயிட்டை குறைப்பது அத்தனை சாதாரண விசயமல்ல. ஆறு மாதம் ஆனாலும் இப்போது இருக்கிற உடல்கட்டுக்கு மாற முடியாது என்று அந்த வேடத்தில் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டாராம். அதனால் இனியா நடிக்கயிருந்த அந்த குண்டு ஆன்ட்டி வேடத்துக்கு வேறு நடிகை செலக்சன் நடத்தி வருகிறார் அமீர்.