சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தலைப்பு பஞ்சம் ஏற்பட்டிருப்பது கண்கூடாக தெரிகிறது. ஏற்ற பட தலைப்பு கிடைக்காமல் பழைய படங்களின் தலைப்பையே வைத்து வருகின்றனர். இன்னும் சிலர் பிரபல நடிகர்கள் பேசிய டயலாக்கை எல்லாம் தலைப்பாக்கி வருகின்றனர். அந்தவகையில் ரஜினி பேசிய பிரபல வசனம் ஒன்று இப்போது பட தலைப்பாகியுள்ளது.
முள்ளும் மலரும் படத்தில் ரஜினி பேசிய கெட்ட பையன் சார் இந்தக் காளி என்ற வசனம் கெட்ட பையன் சார் இவன் என படப் பெயராகியுள்ளது. சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் காந்தி பாபுவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த வித்தியாச நடிகர் நட்டிதான் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார்.
படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர் ராஜன். இவர் நடிகர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் ஆவார். அப்பா இயக்குநர் என்பதால் எல்லாம் தனக்குத்தெரியும் என மகன் அப்படியே திரைப்படம் இயக்க வந்து விடவில்லை. முறையாக இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவர்.
இதே படத்தில் ஏ.எச்.காஷிப் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவரும் ஒரு வாரிசுக் கலைஞர்தான். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை மகன்தான் இந்த காஷிப். கடந்த காதலர் தினத்தன்று வெளியான ”போ போ என்...“ என்கிற ஒற்றைப் பாடல் மூலம் எட்டுத் திக்குகளையும் எட்டிப் பார்க்க வைத்தவர்தான் இந்த காஷிப்.
பி.சி.ஸ்ரீராமின் மாணவர் கெளதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டர் பி.லெனின் மாணவர் செந்தில் சிவகுமார் எடிட்டிங் வேலையை செய்கிறார்.
6 பேஸ் ஸ்டுடியோஸ் சார்பில் நவீன் பிரபாகரன், சுரேஷ் கண்ணன், விகதேஷ், ஆக்டோஸ்பைடர் எஸ்.துரை என நண்பர்கள் இணைந்து முதல் தயாரிப்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.