Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எமன் படத்தில் ஜெயம்ரவி நடிக்க மறுத்தது ஏன்?

24 பிப், 2017 - 14:47 IST
எழுத்தின் அளவு:
Why-jayam-ravi-not-acted-in-Yaman-movie.?

ஜீவாசங்கர் இயக்கத்தில் விஜய்ஆண்டனி நடித்த எமன் படம் இன்று திரைக்கு வருகிறது. சில நாட்களுகக்கு முன் திரையுலகப் பிரமுகர்கள் சிலருக்கு எமன் படத்தை திரையிட்டனர். படத்தைப் பார்த்த அனைவருமே விஜய் ஆண்டனியையும் இயக்குநர் ஜீவாசங்கரையும் பாராட்டித்தள்ளி இருக்கிறார்கள்.


எமன் படத்தில் விஜய் ஆண்டனி நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன் அந்தக்கதையை என்னிடம் தான் ஜீவாசங்கர் சொன்னார். நான் தான் இந்தப்படத்தை மிஸ் பண்ணிவிட்டேன் என்று எமன் பட விழாவில் பேசினார் விஜய் சேதுபதி.


உண்மையில் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனியிடம் சொல்வதற்கு முன், ஜீவா சங்கர் இந்தக் கதையை சொன்னது ஜெயம் ரவியிடம் தான். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவா கடைசியாக இயக்கிய தாம் தூம் படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஜெயம்ரவி. இந்தப் படத்தை இயக்கும் போது தான் ஜீவா மாரடைப்பின் காரணமாக இறந்தார். அவர் இறந்த பிறகு தாம் தூம் படத்தை முடித்துக் கொடுத்தவர் ஜீவாவின் உதவியாளரான சங்கர். அவர்தான் பிறகு தன் பெயரை ஜீவா சங்கர் என்று மாற்றிக் கொண்டார்.


தாம்தூம் படத்தில் பணியாற்றியபோதே ஜெயம்ரவி பழக்கம் என்பதால் எமன் படத்தின் கதையை அவரிடம் சொன்னார் ஜீவா சங்கர். கதையைக் கேட்ட ஜெயம்ரவி, நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். சுமார் இரண்டு வருடங்கள் காத்திருக்க வைத்துவிட்டு, கடைசியில் இந்தக்கதை என் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் பிடிக்கவில்லை.. ஸாரி என்று ஜீவா சங்கரை கழற்றிவிட்டு விட்டாராம்.


அதனால் அப்ஸெட்டான ஜீவா சங்கர், பிறகு மனதை தேற்றிக் கொண்டு வேறு ஹீரோக்களைத் தேடிப்போனார். இன்றைக்கு எமன் படத்துக்கு கிடைத்துள்ள பாஸிட்டிவ்வான ரிப்போர்ட் கேட்டு ஜெயம் ரவி நிச்சயம் வருத்தப்படுவார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in