ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தரமணி, துப்பறிவாளன், வடசென்னை ஆகிய படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா. இதில் ராமின் தரமணி படத்தில் நாயகியாக நடித்திருப்பவர், துப்பறிவாளன், வடசென்னை படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்துள்ளார். மேலும், தரமணி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் என்றபோதும், ஆண்ட்ரியா கம்போஸ் செய்து எழுதி, பாடிய ஒரு ஆங்கில பிரமோசன் பாடலும் இந்த படத்தில் இடம்பெறுகிறது.
இந்நிலையில், இதுவரை பின்னணி பாடகியாக இருந்து தரமணியில் ஒரு பாடலை கம்போஸ் செய்த பிறகு ஆண்ட்ரியாவுக்கு இசை மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. அதன்காரணமாக, தற்போது ஒரு வீடியோ ஆல்பத்தை அவர் ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார். அதற்கு அவரே பாடல் கம்போஸிங் செய்து ஆங்கிலத்தில் எழுதி பாடியிருப்பவர், தற்போது அதில் நடித்தும் வருகிறார். இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது.