Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாவனா கடத்தப்பட்டதின் பின்னணி என்ன? பரபரப்பு தகவல்கள்

19 பிப், 2017 - 12:14 IST
எழுத்தின் அளவு:
what-is-the-actual-reason-behind-bhavana-case

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை பாவனா நேற்று அவரது டிரைவரால் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தலின் பின்னணி பற்றி ஒரு பார்வை...


கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாவனா டிரைவர் தேவை என்று பத்திரிக்கையில் விளம்பரம் செய்தார். அந்த விளம்பரத்தை பார்த்து பல்சர் சுனில் என்கிற சுனில் குமார் என்பவர் வேலைக்கு சேர்ந்தார். அவர் பாவானவுக்கு மிகவும் நம்பிக்கையானவராக மாறினார். இந்த நிலையில் பாவனாவுக்கு நெருக்கமான ஒரு போலீஸ் அதிகாரி பாவனாவிடம் "உங்களிடம் டிரைவரா உள்ள சுனில் குமார் மீது ஆள்கடத்தல் வழக்கு, கார் திருட்டு வழக்கு உள்ளது. இவரை எப்படி வேலையில் சேர்த்துக் கொண்டீர்கள்?" என்று கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாவனா சுனிலை வேலையிலிருந்து உடனடியாக நீக்கிவிட்டார். அதற்கு பிறகு மார்ட்டின் என்பவரை டிரைவராக வேலைக்கு சேர்த்துள்ளார்.


பாவனாவிடம் டிரைவர் வேலை காலியாக இருக்கிறது என்று கூறி மார்ட்டினை பாவனாவிடம் அனுப்பி வைத்ததே சுனில் குமார்தான். இது பாவனாவுக்கு தெரியாது. தன்னை வேலையை விட்டு நீக்கிய பாவனாவை பழிவாங்க திட்டமிட்டு மார்ட்டினை அவரின் டிரைவராக்கி உள்ளான் சுனில்.இருவரும் சேர்ந்து தீட்டிய திட்டத்தை நேற்று அரங்கேற்றி உள்ளனர்.


தற்போது பாவனாக ஹனீபி 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் திருச்சூரில் நடந்து வருகிறது. படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இரவு 1 மணியளவில் கொச்சிக்கு காரில் திரும்பினார். காரை டிரைவர் மார்ட்டின் ஓட்டினார். நெடும்பா சேரி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது பின்னால் ஒரு டெம்போ டிராவலில் சுனில் குமார் தனது ஆட்களுடன் பின் தொடர்ந்து வந்துள்ளார். காக்கநாடு அருகே வரும்போது டெம்போ டிராவலை கார் மீது மோதியுள்ளனர். இனால் காரை நிறுத்தினார் மார்ட்டின். அப்போது வேகமாக ஓடிவந்த சுனில் குமாரும், அவரது நண்பர்களும் மார்ட்டினை தாக்கி விட்டு பாவனாவுடன் காரை எடுத்துக் கொண்டு பறந்தனர்.


சுமார் இரண்டு மணி நேரம் அவர்களுடன் காருக்குள் போரடியிருக்கிறார் பாவனா. பாவனாவை அவர்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர். அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். பின்னர் பாவனாவுடன் காரையும் பாலாரிவட்டம் என்ற இடத்தில் விட்டுவிட்டு வேறொரு காரில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.


அவர்கள் பாவனாவை விட்ட இடத்தின் அருகில் இயக்குனர் லாலின் வீடு இருந்தது. அங்கு சென்ற பாவனா நடந்ததை கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து எர்ணாகுளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஐஜி விஜயனும், துணை ஐஜி எதீஷ்சந்திராவும் பாவனாவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பாவனாவின் டிரைவர் மார்ட்டினை கைது செய்தனர். சுனில்குமாரை தேடி வருகிறார்கள். டிரைவர்கள் விஷயத்தில் அதிக கவனத்துடன் இருங்கள் என்று மலையாள நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in