‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய படம் ஒரு நாள் கூத்து. ‛அட்டக்கத்தி' தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரித்விகா, ரமேஷ் திலக், கருணாகரன் நடித்திருந்தனர். ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்திருந்தார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்திருந்தார். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜே.சிவகுமார் தயாரித்திருந்தார்.
திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி, ஒரு நிகழ்வுதான். ஆனால் அந்த ஒன்றுக்காக ஒட்டு மொத்த வாழ்க்கையையே தமிழர்கள் செலவிடுகிறார்கள். வாழ்நாள் உழைப்பை திருமணத்தில் கொட்டுகிறார்கள். திருமணம் என்பது ஒரு நாள் கூத்து. ஆடம்பர திருமணங்கள் தவிர்த்து இரு மனங்கள் இணையும் எளிய நிகழ்வாக அது மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை தாங்கி வந்த படம். மூன்று ஜோடிகளின் வாழ்க்கை வழியாக இதை சொன்னது படம்.
இந்தப் படம் மீடியாக்களின் நல்ல விமர்சனத்தோடு ஓரளவிற்கு மக்களின் வரவேற்பை பெற்றது. பின்னர் பட விழாக்களுக்கு சென்ற வந்து கொண்டிருந்தது. கலிபோர்னியாவில் தற்போது நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது இந்தப் படம் இறுதி சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. சிறந்த படத்திற்காக விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் படக் குழுவினர்.