ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளப் படங்களில் நடித்து வந்த மியா ஜார்ஜை, ஆர்யா தம்பி சத்யா நடித்த அமரகாவியம் படத்திற்காக தமிழுக்கு கொண்டு வந்தார் ஜீவா சங்கர். ஆனால் அந்த படம் தோல்வியடைந்ததால் மியா ஜார்ஜின் நடிப்புக்கு கோலிவுட்டில் வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும், அதன்பிறகு இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒருநாள்கூத்து ஆகிய படங்களில் நடித்த மியா, தற்போது விஜய் ஆண்டனியுடன் எமன் படத்தில் நடித்திருக்கிறார். அவரை தமிழுக்கு கொண்டு வந்த ஜீவா சங்கரே இந்த படத்திலும் மியாவை நாயகியாக்கியிருக்கிறார்.
மேலும், இதற்கு முன்பு நடித்ததை விட இந்த எமன் படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறாராம் மியா ஜார்ஜ். அதாவது ஒரு சராசரியான இளைஞன் அரசியல்வாதியால் பாதிக்கப்பட்டு பின்னர் அரசியல் களத்தில் குதித்து வெற்றிபெறும் வேடத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். அப்படி அவர் அரசியலில் இறங்கும்போது அவரது காதலியான மியா ஜார்ஜ், அவருக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் பேசி எனர்ஜி கொடுப்பாராம். அந்த வகையில், இந்த படத்தில் டூயட் பாட மட்டுமே இல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறாாம் மியா ஜார்ஜ்.