விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
நடிகை ஆண்ட்ரியா பாடகி மற்றும் பாடலாசிரியர், இசை அமைப்பாளர். ஏராளமான தனி ஆங்கில பாடல்களை பாடியுள்ளார். டிரிப்டர், நெவர் லெட் யூ கோ என்ற இசை ஆல்பங்களை பாடி வெளியிட்டார். 4.5 மில்லியன் பேர் இந்த பாடல்களை ரசித்து பார்த்தார்கள்.
இந்த நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு எ மூவ்மெண்ட் இன் டைம் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இதில் ஆண்ட்ரியா காதல் பாடல் ஒன்றை உருக உருக பாடுகிறார். அது கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆண்ட்ரியா கூறியிருப்பதாவது: இது எனது மூன்றாவது இசை ஆல்பம். இசை மீதுள்ள ஆர்வம், பக்தியின் காரணமாக நானே பாடலை எழுதி பாடியிருக்கிறேன். நானே இசை அமைத்தும் இருக்கிறேன். எனது முந்தைய ஆல்பங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. அதைப்போல இதுவும் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்புகிறேன். இசை பெருங்கடல் அதில் இந்த ஆல்பம் ஒரு துளி" என்கிறார் ஆண்ட்ரியா.