பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள நடிகைகளைப்போலவே மும்பை நடிகைகளுக்கும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில், தமன்னா, காஜல்அகர்வால், ஹன்சிகா, சிருஷ்டி டான்கே உள்பட பல மும்பை நடிகைகள் கோலிவுட்டில் நடித்து பிரபலமானவர்கள். அதேபோல் தெலுங்கிலும் இவர்கள் அதிகமான படங்களில் நடித்துள்ளனர். அதேசமயம், தமிழ், தெலுங்கில் நடிக்கும் மும்பை நடிகைகள் பெரும்பாலும் மலையாள சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டியதில்லை.
காரணம், அங்கு மிக குறைந்த அளவிலேயே சம்பளம் கொடுப்பார்கள். அதனால், வேறு காரணங்களை சொல்லி நாசுக்காக தவிர்த்து விடுவார்கள். ஆனால், தற்போது தமிழ், தெலுங்கில் படவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், மலையாளத்தில் நடிக்க கதை கேட்டுள்ளார் ஹன்சிகா. அவரைத் தொடர்ந்து தமிழில் விக்ரமுடன் மட்டுமே ஒரு படத்தில் நடித்து வரும் தமன்னாவும், தற்போது மலையாள படங்களில் நடிக்க கல்லெறிந்து வருகிறார். அதோடு, துல்கர்சால்மான், நிவின்பாலி போன்ற இளட்ட நடிகர்கள் தன்னை கவர்ந்த நடிகர்கள் என்றும் ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் தமன்னா.