தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நேரம் படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகர் நிவின்பாலி. அதையடுத்து அவியல் என்ற படத்தில் நடித்திருந்தவர், தற்போது கன்னடத்தில் வெளியான உளிதவாரு கண்டந்தே என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நட்டி நடராஜூடன் இணைந்து நடித்துள்ளார். அவர்களுடன் பிரகாஷ்ராஜ், அசோக் செல்வன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி பிரியா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கெளதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை படத்திற்கு தலைப்பு வைக்காமல் இருந்தனர். அதன்காரணமாக, வேறு சில தலைப்புகள் வதந்திகளாக பரவிக்கொண்டிருந்தன. இந்நிலையில், தற்போது அப்படத்திற்கு ரிச்சி என்று டைரக்டர் கெளதம் ராமச்சந்திரன் டைட்டீல் வைத்துள்ளார். ரிச்சி என்பதன் அர்த்தம் குறித்து கேட்டபோது, இது ஹீரோவாக நடிக்கும் நிவின்பாலியின் கேரக்டர் பெயர் என்கிறார்கள்.