ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தமிழில் விஜய்யுடன் பைரவா படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ், தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு குறி வைத்துள்ளார். டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் 23வது படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு போலீஸாக நடித்து வருகின்றார். இப்படத்திற்கு பின்னர் மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் படத்தை இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கவுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுதாகவும் இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. அரசியலை மையப்படுத்திய இப்படத்தில் மகேஷ் பாபு முதலமைச்சராக நடிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.