தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் நடிக்கும் படம் சிவலிங்கா. இந்தப் படத்தில் பி.வாசு மகன் ஷக்தி வாசு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவரது ஜோடியாக நடிக்கிறார் சாரா தேவா. அக்மார்க் தமிழ் பொண்ணு. சென்னையில் பிறந்து வளர்ந்து மல்டி மீடியாவில் பட்டம் வென்றவர். சிவலிங்காவுக்கு ஆடிசன் நடந்தபோது அதில் கலந்து கொண்டு தேர்வாகியிருக்கிறார்.
"என்னோட குடும்பம் ரொம்ப ஆர்த்தொடக்ஸ். அதனால் நான் நடிக்கிறதுக்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. அப்புறம் ஒரு நிபந்தனையோடு சம்மதிச்சாங்க. முதல் படமே வாசு சார் படம். அவர் மகன் ஜோடி என்றதும் குடும்பத்தினருக்கு உற்சாகம் வந்தது. நிபந்தனையையும் நீக்கிட்டாங்க. அது என்ன நிபந்தனை என்றால் ஆசைக்கு ஒரு படம் மட்டும் நடி என்கிற நிபந்தனை.
முதல் படத்தில் இரண்டாவது ஹீரோயின் என்பதற்காக வருத்தப்படவில்லை. சினிமாவில் ஜெயித்த பல ஹீரோயின்கள் ரிச் கேர்ள், ஹீரோயின் தோழியாக நடித்து வந்தவர்கள்தான். படத்தில் எனக்கும், ஷக்தி வாசுவுக்கு ஒரு டூயட் பாடல் இருக்கிறது. அந்த பாடல் "சாரா... சாரா..." என்று ஆரம்பிக்கும் எனது உண்மையான பெயர் சாரா... என்பதும் யதேச்சையாக அமைந்த பொருத்தம். சிவலிங்கா எனக்கு நல்ல எண்ட்ரியை கொடுக்கும் என்று நம்புகிறேன்" என்கிறார் சாரா தேவா.