'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சந்தானத்தை தனது வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு. இதனால் சந்தானத்திற்கு சிம்பு மேல் அளவுகடந்த மதிப்பு, மரியாதை, நன்றி உணர்வு இருக்கும். அதனால் தான் தற்போது நடித்து வரும் சர்வர் சுந்தரம் படத்தின் டீசரை சிம்புவை கொண்டு நேற்று வெளியிட்டார்.
கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வகுமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கி உள்ளார். வைபவி ஷண்டிலியா ஹீரோயின். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். டீசர் வெளியீடு குறித்து இயக்குனர் ஆனந்த் பால்கி கூறியதாவது:
பல ஆண்டுகளாக சிலம்பரசன் - சந்தானம் இடையே இருந்து வரும் நட்புறவை பற்றி எல்லோருக்குமே தெரியும். இந்த தருணத்தில் சிலம்பரசன் எங்கள் படத்தின் டீசரை வெளியிட்டிருப்பது, எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. இதை டீசர் வெளியீடு என்று சொல்வதை விட, நட்புறவின் கொண்டாட்டம் என்றே சொல்லலாம். வெளியான சில மணி நேரங்களிலேயே டீசர் ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பை பெற்று வருவதை பார்க்கும் பொழுது எங்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. என்கிறார் இயக்குநர் ஆனந்த் பால்கி.