'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
36 வயதினிலே படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா நடிக்கும் படத்திற்கு "மகளிர் மட்டும்" என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஜோதிகாவின் பஸ்ட்லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மகளிர் மட்டும் படத்தின் டீசரை நடிகரும் ஜோதிகாவின் கணவருமான சூர்யா நேற்று வெளியிட்டுள்ளார்.ஜோதிகா உள்ளிட்ட நடுத்தர வயது பெண்கள் சிலர் காரில் பயணித்தபடி பேசுவது போல் டீசரின் துவங்குகிறது. அவர்கள், கடந்த 5 ஆண்டுகளில் தங்களின் குடும்பத்திற்காக எத்தனை தோசைகளை தயார் செய்துள்ளனர் என கணக்கு சொல்வது போல் அந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் முடிவில், இயற்கை எழில் சூழ்ந்த மலைஉச்சியில் போல் நிற்கும் காரில் இருந்து ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட 4 பெண்கள் இறங்குகிறார்கள். அவர்களில் ஜோதிகா மட்டும், "நானும் இந்த உலகத்தில் தான் இருக்கேன்" சத்தமாக சொல்கிறார்.
சுமார் 1.30 நிமிடங்கள் கொண்டதாக இந்த டீசர் அமைந்துள்ளது. நேற்று மாலை 7 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த டீசரை யூட்யூப்பில் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.