ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் திலகம் சிவாஜியின் பேரன், பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. அன்னை இல்லத்திலிருந்து வந்திருக்கும் அடுத்த நடிப்பு வாரிசு. விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி மிகப்பெரிய வெற்றிப் படம். அதன் பிறகு வெளிவந்த இவன் வேறமாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு போன்ற படங்கள் விக்ரம் பிரபுவுக்கு ஓரளவுக்கு கை கொடுத்தது. அதன் பிறகு நடித்த வெள்ளக்காரதுரை, இது என்ன மாயம், வாகா, வீர சிவாஜி படங்கள் விக்ரம் பிரபு நடித்த படங்களின் எண்ணிக்கையை கூட்டியதைத் தவிர வேறு எந்தவிதத்திலும் உதவவில்லை.
இந்த நிலையில்தான் அவர் நடித்துள்ள சத்ரியன் அடுத்து வெளிவர இருக்கிறது. சுந்தரபாண்டியன் வெற்றிப் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி உள்ளர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார், சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் பிரபு ஜோடியாக மஞ்சுமா மோகன் நடித்துள்ளார். இவர்கள் தவிர சரத் லோகித்தாஸ், ஆடுகளம் நரேன், அருள்தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார்.
திருச்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. படப்பிடிப்பும் திருச்சியில் நடந்தள்ளது. பேமிலி செண்டிமெண்டுடன் கூடிய ஆக்ஷன் கதை. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விக்ரம் பிரபுவுக்கு சத்ரியன் கை கொடுக்குமா என்பதுதான் இப்போது அன்னை இல்லத்தின் எதிர்பார்ப்பு. எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்று விக்ரம்பிரபுவும் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்.