‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களுக்கு சராசரி ரசிகர்களாய் இருக்கும் அனைவருக்கும் மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் தெரிந்த ஒரு தொடராய் இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சரவணன் மீனாட்சி'. இந்தத் தொடரின் தற்போதைய சீசனில் சரவணன் ஆக நடித்துக் கொண்டிருப்பவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்த ரியோ. இதற்கு முந்தைய சீசனில் சரவணன் ஆக நடித்தவர் கவின். இந்த இரண்டு சரவணன்களும் தற்போது ஒரே படத்தில் நடித்துள்ளார்கள். ஏறக்குறைய இருவருக்குமே இந்தப் படம் அறிமுகப் படம் என்று கூட சொல்லலாம்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் 'சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்ககத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நாயகன் நாயகியாக நடிக்கும் 'சத்ரியன்' படத்தில் கவின், ரியோ இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
கவின் வில்லன் மகளைக் காதலிக்கும் காதலனாகவும் (?), ரியோ, நாயகன் விக்ரம் பிரபுவின் நண்பனாகவும் நடித்துள்ளார்கள். இன்று வெளியிடப்பட்ட டிரைலரில் இருந்து இவர்கள் இருவரின் கதாபாத்திரமும் இப்படித்தான் இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
சிவகார்த்திகேயனும் இப்படித்தான் தனுஷ் நண்பனாக நடித்து இப்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அப்படி ஒரு வாய்ப்பு கவின், ரியோ இருவரில் யாருக்கு அமையப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.