பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நிவின் பாலி தமிழில் நடித்து வரும் படத்திற்கு இதுவரை டைட்டில் வைக்காமல் இருந்தார்கள். தற்போது ரிச்சி என்று வைத்திருக்கிறார்கள். கவுதம் ராமச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் நிவின் பாலியுடன், நட்ராஜ், பிரகாஷ்ராஜ், ராஜ்பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். யு டேர்ன் புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஹீரோயின், லட்சுமிப்ரியா செகண்ட் ஹீரோயின். இதன் படப்பிடிப்புகள் தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் நடந்து வருகிறது. பெரும்பான்மையான படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
இதுகுறித்து இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் மையப்படுத்தி தான் கதை நகரும். பல எண்ணற்ற யோசனைகளுக்கு பிறகு, நாங்கள் இந்த படத்திற்கு ரிச்சி என்று தலைப்பிட்டுள்ளோம். ரிச்சி என்பது நிவின் பாலி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர். தமிழில் முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார் நிவின் பாலி.
75 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. கோடை விடுமுறை நாட்களில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். படத்தின் முதல் காட்சி போஸ்டரையும், டைட்டில் டிசைனையும் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றோம் என்கிறார் இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன்.