ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிவா இயக்கத்தில் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடித்த முதல் படம் சிறுத்தை. அந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பும் பேசும்படியாக அமைந்ததோடு, ஆக்சன் ஹீரோவாகவும் உருவெடுத்தார். அதன்பிறகு சில மாறுபட்ட கதைகளில் நடித்த கார்த்தி, தற்போது மீண்டும் சதுரங்கவேட்டை டைரக்டர் வினோத் இயக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் போலீசாக நடித்து வருகிறார்.
மேலும், மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தில் நடித்து முடித்ததும் இந்த படத்தில் நடிக்கத் தொடங்கினார் கார்த்தி. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 3 நாட்கள் மட்டுமே சென்னையில் நடைபெற்றது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி முதல் ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து அங்கு மார்ச் 28-ந்தேதி வரை படப்பிடிப்பு நடக்கிறதாம். போலீஸ் சம்பந்தப்பட்ட பெருவாரியான காட்சிகள் மட்டுமின்றி, இரண்டு பாடல்களும் இதுவரை கேமரா கண்களே படாத அழகியலான லொகேசன்களில் ராஜஸ்தானில் படமாக்கப்படுகிறதாம்.