வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து அசத்திய ஹிந்தி நடிகர் வித்யூத் ஜம்மால், சூர்யாவுடன் இணைந்து அஞ்சான் படத்திலும் முக்கிய வேடமேற்று நடித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் வில்லனாக நடித்த வித்யூத் தற்போது ஆக்ஷன் ஹீரோவா களமிறங்கியுள்ளார். இயக்குனர் தேவன் பொஜ்னனி இயக்கத்தில் உருவாகியுள்ள கமேன்டோ-2 எனும் படத்தில் வித்யூத் நாயகனாக நடித்துள்ளார். அடா சர்மா, இஷா குப்தா மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் மார்ச் 3ல் திரைக்கு வரவுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருடன் ஊசரவெலி எனும் படத்தில் நடித்த வித்யூத் ஜூனியர் என்.டி.ஆரின் நெருங்கிய நண்பரும் கூட. நேற்று வெளியான கமேன்டோ-2 படத்தின் டிரைலரைப் பார்த்த ஜூனியர் என்.டி.ஆர், இப்படம் வெற்றி அடைய வித்யூத்திற்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வித்யூத்தும் ஜூனியர் என்.டி.ஆருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.