ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஷாலுடன் நடித்த கத்திச்சண்டை படத்திற்கு பிறகு சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பாகுபலி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. சிம்பு படத்தில் ஸ்ரேயா முதிர்ச்சியான ரோலில் நடிக்க, தமன்னா இளவட்ட நாயகியாக நடிக்கிறார். அதேபோல், பாகுபலி படத்தில் நடித்த அதே அவந்திகா கேரக்டரில் தற்போது பாகுபலி-2விலும் நடித்துள்ளார். இதையடுத்து சில புதிய படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் தீவிர மடைந்திருக்கிறார் தமன்னா.
இந்நிலையில், விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இப்படத்தில் இருந்து கால்சீட் பிரச்சினை காரணமாக சாய் பல்லவி நீக்கப்பட்டதை அடுத்து அவர் நடிக்கயிருந்த வேடத்தில் நடிக்க தமன்னா, கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இப்போது ஓடுற குதிரையான தமன்னாவை புக் பண்ண முடிவு செய்து பேசி வருகின்றனர். இதுவரை விஜய், அஜீத், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால், விஜயசேதுபதி என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்ட தமன்னா, முதன்முறையாக விக்ரமுடன் நடிக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.