சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, 'ரேனிகுண்டா' படத்தை இயக்கிய பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் 'கருப்பன்'. அண்மையில் தொடங்கப்பட்ட இந்தப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தார். திடீரென்று அவருக்கு காலில் ஒரு காயம் ஏற்பட்டதால் கருப்பன் படத்தில் லட்சுமி மேனன் நடிக்கவில்லை என்றும், எனவே இப்படத்தின் கதாநாயகியாக தான்யா நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
சசிகுமாருடன் 'பலே வெள்ளையத் தேவா' படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் தான்யா. படப்பிடிப்பு தொடங்க சில நாட்களே இருந்தநிலையில் லட்சுமி மேனன் கருப்பன் படத்திலிருந்து பின்வாங்கியது ஏன்? காலில் காயம் என்பது எல்லாம் சும்மா, உண்மையான காரணமே வேறு என்கிறார்கள் கருப்பன் படக்குழுவினர். விஜய்சேதுபதியும், லட்சுமிமேனனும் ஜோடியாக நடித்த றெக்க படம் கமர்ஷியலாக சரியாகப்போகவில்லை. அதன் காரணமாகவே லட்சுமி மேனனை நீக்கிவிட்டு, தான்யாவை புக் பண்ணியதாக கூறப்படுகிறது.