'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மராத்தி பட நடிகை வைபவி சாண்டில்யா நடிக்க, மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் மற்றும் ஆனந்த்ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
மேலும், நாகேஷ்க்கு சர்வர் சுந்தரம் மெகா ஹிட்டாக அமைந்தது போன்று இந்த படமும் தனக்கு ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கும் சந்தானம், இந்த படத்திற்கு பரபரப்பு கூட்ட வேண்டும் என்பதற்காக தற்போது டீசரை சிம்பு, பிப்ரவரி 3-ந்தேதி வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார். ஆக, சிம்பு படங்களின் டீசரை இணையதளங்களில் அவரது ரசிகர்கள் ட்ரன்டாக்கி வருவது போன்று இப்போது சந்தானம் பட டீசரையும் பிரபலப்படுத்துவார்கள் என்று தெரிகிறது.