இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஓரம்போ, வ படங்களைத் தொடர்ந்து புஷ்கர் காயத்ரி இயக்கி வரும் படம் விக்ரம் வேதா. இந்த படத்தில் மாதவன், விஜயசேதுபதி இணைந்து நடிக்கிறார்கள். கதைப்படி மாதவன் போலீஸ் வேடத்தில் நடிக்க விஜயசேதுபதி தாதாவாக நடிக் கிறார். அவர்களுக்கிடையே என்ன நடக்கிறது என்பதுதான் இந்த கதை. இந்த படத்தில் மதயானைக்கூட்டம், கிருமி படங்களில் நடித்த கதிர், விஜயசேதுபதியின் தம்பியாக நடித்து வருகிறார்.
மேலும், இப்படத்தில் தாதாவான விஜயசேதுபதியை துரத்தி பிடிக்கும் போலீசாக மாதவன் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், விஜயசேதுபதி எதற்காக தாதாவானார் என்பதை சொல்வது ஒரு கதையாகவும், அவரை பிடிப்பதற்காக மாத வன் முயற்சி எடுப்பது இன்னொரு கதையாகவும் கதையோட்டம் செல்கிறதாம். ஆக, ஒரே முட்டையில் இரண்டு கருக்கள் போன்று இந்த படம் உருவாகிக்கொண்டிருக்கிறது. அதேசமயம், முற்பாதியில் விஜயசேதுபதியின் கேரக்டர் அதிரடி வில்லனாக தெரிந்தபோதும், க்ளைமாக்சில் அவரும் ஹீரோவாகி விடுகிறாராம்.