விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் |
காஷ்மோரா படத்தையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்து முடித்துவிட்டார் கார்த்தி. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கார்த்தியுடன் அதிதிராவ் ஹைதரி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். ரோஜா படத்தை அடுத்து இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை காஷ்மீர் மற்றும் ஊட்டி, நீலகிரி ஆகிய பகுதிகளில் நடத்தியுள்ள மணிரத்னம், தற்போது இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்திருக்கிறார் கார்த்தி.
அப்படத்தைத் தொடர்ந்து தற்போது சதுரங்கவேட்டை வினோத் இயக்கும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடிக்கிறார் கார்த்தி. ஏற்கனவே சிறுத்தை படத்தில் போலீசாக நடித்த அவர், இந்த படத்தை அதை விட அதிரடியான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை யில் பத்து நாட்கள் நடைபெறுகிறது. அதையடுத்து, குஜராத்திற்கு பறக்கிறது யூனிட். குஜராத்தில் இருந்து பல மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு மலைப்பிரதேசத்தில் 41 நாட்கள் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்துகிறாராம் இயக்குனர் வினோத்.