பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
மதுரை சம்பவம், தொப்பி படங்களை இயக்கியவர் எழுத்தாளர் யுரேகா. சில வருடங்களுக்கு முன்பு அவர் இயக்கிய படம் சிவப்பு எனக்கு பிடிக்கும். யுரேகா சினிமா ஸ்கூல் சார்பில் அவரே தயாரித்திருந்தார். மகேஷ்வரன் ஒளிப்பதிவு செய்திருந்தார், சிவ சரவணன், அனிஷ் யுவானி இசை அமைத்திருந்தனர்.
இது ஒரு பாலியல் தொழிலாளியின் கதை. ஒரு அழகான கிராமத்து பெண்ணை இந்த சமூகம் எப்படி பாலியல் தொழிலுக்குள் தள்ளுகிறது. அவளை அதிலிருந்து மீள முடியாமல் செய்கிறது என்கிற கதை. இதில் பாலியல் தொழிலாளியாக பிரபல சின்னத்திரை நடிகை சாண்ட்ரா எமி நடித்திருக்கிறார். அவரை பேட்டி காணும் பத்திரிக்கையாளராக இயக்குனர் யுரேகாவே நடித்திருக்கிறார்.
பாலியல் தொழிலை அங்கீகரிக்க வேண்டும். பாலியல் தொழிலாளிகளுக்கு அடையாள அட்டை வேண்டும். ஒவ்வொரு நகரத்திலும் சிவப்பு விளக்கு பகுதி கொண்டு வர வேண்டும் என்கிற புரட்சிகரமான கருத்துக்களை சொல்லும் படம்.
2015ம் ஆண்டின் இறுதியில் இந்தப் படத்தை வெளியிட யுரேகா முயற்சித்தார். சரியான தியேட்டர் கிடைக்கவில்லை. ஒரு சில தியேட்டர்களில் வெளியான நிலையில் படம் திரும்ப பெறப்பட்டுவிட்டது. அதன் பிறகு படத்தை ஜே.எஸ்.கே.பிலிம் கார்பரேஷன் ஜே.எஸ்.சதீஷ்குமார் வாங்கினார். அவரும் வெளியிடாடமல் வைத்திருந்தார். தற்போது வருகிற 20ந் தேதி வெளிவருவதாக அறிவித்திருக்கிறார்கள்.