பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
மெட்ரோ படத்தில் அறிமுகமான ஷிரிஷ் நடிக்கும் அடுத்த படம் ராஜா ரங்குஸ்கி. பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய தணிதரன் இயக்குகிறார். இதில் பூஜா தேவரியா ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டார். ஆனால் தற்போது பூஜா தேவரியா மாற்றப்பட்டு சாந்தினி ஹீரோயினாகியிருக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் தரணிதரன் கூறியிருப்பதாவது:
பூஜா தேவாரியா ஒரு அற்புதமான கலைஞர். ஆனால் எதிர்பாராத உடல் நல குறைவால், அவருக்கு இப்போது முழவதுமாக ஓய்வு தேவைபடுகின்றது. இரண்டு மாதங்களில் ராஜா ரங்குஸ்கி படத்தை முடித்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டை மனதில் கொண்டு, எங்கள் படத்தின் கதாநாயகியாக சந்தினி தமிழரசனை மாற்றி இருக்கின்றோம். கடைசி நேரத்தில் எங்கள் படத்தின் கதாநாயகியாக இணைந்த சந்தினி தமிழரசனின் அசத்தலான நடிப்பு, எங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இன்னும் இரண்டு மாத காலத்தில் எங்களின் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்." என்கிறார் ராஜா ரங்குஸ்கி படத்தின் இயக்குநர் தரணிதரன்.