ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த 15 வருடங்களாக கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷாவுக்கு கடந்த சில வருடங்களாகவே இறங்குமுகம் தொடங்கிவிட்டது. குறிப்பாக அவரது திருமண அறிவிப்பு வெளியானது முதல் முன்னணி ஹீரோக்களின் சிபாரிசு பட்டியலில் த்ரிஷாவின் பெயர் இல்லை. எனவே இனி ஹீரோக்களை நம்பினால் காலம் தள்ள முடியாது என்பதை புரிந்து கொண்ட த்ரிஷா, சமீபகாலமாக வழக்கமான ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதையில் தனக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கொடி' படத்திற்கு அடுத்ததாக விரைவில் வெளியாகவிருக்கும் 'மோகினி' படத்தில் த்ரிஷாவுக்கு முக்கியமான கேரக்டர்தான். ரிலீசுக்கு தயாராகி வரும் இந்த படத்தை தொடர்ந்து த்ரிஷா நடிக்கும் படம் 'கர்ஜனை'.
அனுஷ்கா ஷர்மா நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'NH-10' படத்தின் தமிழ் ரீ-மேக்கான இப்படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக டிவி நடிகர் அமித் பார்கவ் நடிக்கிறார். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். சுந்தர் இயக்கி வரும் ரோட் மூவியான இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இந்த படம் தவிர த்ரிஷா கைவசம் இப்போது 'சதுரங்கவேட்டை-2', '96', 'ஹே ஜூட்' (மலையாளம்), 18:18 ஆகிய படங்களும் இருக்கின்றன.