ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதியவர்கள் இணைந்து பிரகாமியம் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். பொறியியல் பட்டதாரியான பிரதாப் தயாரித்து, இயக்கி நடிக்கிறார். பார்வதி, சுபா, ரகுமான், வேலூர் வாசுதேவன், மனோ உள்பட பலர் நடிக்கிறார்கள். பி.முத்துப்பாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ் இசை அமைக்கிறார். பிரகாமியம் என்றால் என்ன என்று விளக்குகிறார் பிரதாப்.
"பிரகாமியம் என்பது சமஸ்கிருத சொல். ஆய கலைகள் 64ல் பிரகாமியம் ஒரு கலை. கூடுவிட்டு கூடுபாய்கிற கலை. இதில் ஹீரோ புராண கதைகளில் வருகிற மாதிரி கூடுவிட்டு கூடு பாய்கிறவன் இல்லை, மனதிலிருந்து இன்னொடு மனதிற்கு மாறுகிறவன். நீண்ட கனவுகளோடு தூங்காமல் வாழ்கிறவன். ஒரு உளவியல் ரீதியான சைக்கோ.
ஒரு புறம் சைக்கோ கதையாக இருந்தாலும் இன்னொரு புறம் தந்தை மகனுக்கு இடையிலான உறவையும் சொல்கிற படம். தணிக்கை அதிகாரிகளே பார்த்துவிட்டு இதுவரை இப்படி ஒரு திரைக்கதையை பார்த்தது இல்லை என்று கூறினார்கள். புதுமையை விரும்பி வரவேற்கும் ரசிகர்கள் இதனையும் வரவேற்பார்கள் என்று நம்பி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்" என்கிறார் பிரதாப்.