'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜி.வி.பிரகாஷ், கிரிதி கர்பந்தா மற்றும் பலர் நடித்த 'புரூஸ் லீ' படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திடீரென பட வெளியீட்டை பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்கள். ஜி.வி.பிரகாஷ் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படங்கள் ஒன்று கூட வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. அதனால், 'ப்ரூஸ் லீ' படத்திற்கு வியாபார ரீதியாக வரவேற்பு இல்லையாம். மேலும், பொங்கலுக்கு 'பைரவா' படம் வெளிவருவதால் அந்தப் படத்துடன் போட்டி போட்டு வசூலைப் பெற முடியாது என வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் தயக்கம் காட்டியிருக்கிறார்கள்.
அதனால், படத்திற்கு மிகக் குறைவான விலையை நிர்ணயித்தார்களாம். படத் தயாரிப்புச் செலவை விட அவர்கள் கேட்ட தொகை குறைவாக இருந்ததால் இப்போதைக்கு படத்தை வெளியிடுவதை தயாரிப்பு நிறுவனத்தினர் தள்ளி வைத்துவிட்டார்களாம். ஜனவரி 26 வெளியிடலாம் என நினைத்தால் அன்று 'எஸ் 3, சிவலிங்கா' ஆகிய படங்கள் ஏற்கெனவே தியேட்டர்களை புக் செய்து வைத்துள்ளதால் அன்றும் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடைசியில் வேறு வழியில்லாமல் பிப்ரவரியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். இதற்கான அறிவிப்பை படக்குழுவே போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.