ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நான் அவனில்லை-2 படத்தில் நடித்த பிறகு ஜீவன் நடித்த படம் கிருஷ்ணலீலை. கவிதாலயா நிறுவனம் தயாரித்த அந்த படம் கிடப்பில் போடப்பட்டதால், அதன்பிறகு ஜீவனுக்கு புதிய படங்கள் இல்லை. அதனால் சுமார் 6 வருடங்கள் படமில்லாமல் இருந்த அவர், 2015ல் மீண்டும் சினிமாவில் என்ட்ரியாகி அதிபர் என்ற படத்தில் நடித்தார். ரியல் எஸ்டேட் தொழிலை மையப்படுத்தி உருவான அந்த படம் ஜீவனுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
அதன்பிறகு அவர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடித்து வந்த படம் ஜெயிக்கிற குதிரை. இந்த படத்தில் கதைப்படி சினிமாவில் போராடி ஹீரோவாக வெற்றி பெறும் ஒரு இளைஞனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜீவன். பல மாதங்க ளாக பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியிருந்த இப்படம் பின்னர் அதிலிருந்து மீண்டு, இப்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஜீவனுடன் இப்படத்தில் டிம்பிள் சோப்டே, அம்பிகா சோனி ஆகியோர் நாயகிகளாக நடிக்க, கோவை சரளா, தம்பி ராமைய்யா, பவர்ஸ்டார், மனோபாலா, யோகி பாபு, மயில் சாமி, சிங்கம் புலி, ரோபோ சங்கர் உள்ளிட்ட ஒரு பெரும் காமெடி பட்டாளமே நடித்துள்ளனர். தற்போது டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கும் ஜெயிக்கிற குதிரை படம் மார்ச், ஏப்ரலில் திரைக்கு வந்து விடும் என்கிறார்கள்.