இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
துபாயில் வளர்ந்த மதுரை பொண்ணு நிவேதா பெத்ராஜ். மிஸ்.துபாய் பட்டம் வென்று அதன் மூலம் சினிமாவுக்கு வந்தவர். முதல் படமான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதில் 60 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. நிவேதா 20 நாளில் தன் போர்ஷனில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ஜெயம்ரவி நடிக்கும் டிக் டிக் டிக் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் மார்ச் மாதத்திலிருந்து தொடங்குகிறது.
இதற்கிடையில் தெலுங்கு படத்தில் நடித்து அங்கும் கால் பதிக்கிறார். ராஜ்கண்டுகுரி என்பவர் தயாரிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கும் இந்தப் படத்திற்கு மெண்டல் மனசிலு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். புதுமுகம் ஸ்ரீவிஷ்ணுவிற்கு ஜோடியாக நடிக்கிறார் நிவேதா. ஸ்ரீவிஷ்ணு செகண்ட் ஹீரோவாக பல படங்களில் நடித்து விட்டு இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாகிறார். இது ஒரு ரொமான்ட்டிக் த்ரில்லர் படம். வருகிற 18ந் தேதி முதல் ஐதராபாத்தில் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து கொடுத்துவிட்டுத் திரும்புகிறார் நிவேதா.