ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் அடுத்து விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகனை கொண்டு ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
தற்போது அஜித் நடிப்பில் 'AK57' படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்தப் படத்திற்கு முதலில் 'முடிசூடா மன்னன்' என்ற தலைப்பு வைத்திருந்தனர். படப்பிடிப்பு முடிவடைந்து சென்சாருக்கு அனுப்பும் நேரத்தில்தான் இதே தலைப்பில் தயாரிப்பாளர் கேயார் ஒரு படத்தை எடுத்து அது சென்சாரும் செய்யப்பட்ட தகவல் தெரிய வந்தது. எனவே வேறு தலைப்பு தேடி வந்தனர்.
இந்நிலையில் இப்போது முடிசூடா மன்னன் என்ற டைட்டில் மாற்றப்பட்டு இப்போது 'சத்ரியன்' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன் மறைந்த இயக்குனர் கே.சுபாஷ் இயக்கத்தில், மணிரத்னம் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்து 1990-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'சத்ரியன்'.
ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் தலைப்பை புதிய படங்களுக்கு சூட்டி வரும் நிலையில் இப்போது விக்ரம் பிரபு நடிக்கும் படத்திற்கு விஜயகாந்த் நடித்த படத்தின் பெயரை தலைப்பாக்கியிருக்கிறாகள். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா, கெவின் ஆகியோரும் நடிக்கிறார்கள்.