தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான படம் மன்னன். ரஜினி நடிப்பில், சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த படம், பி.வாசு இயக்கினார். விஜயசாந்தி, குஷ்பு, ரஜினி ஜோடியாக நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். அனுராக அரளிது என்ற கன்னட படத்தின் ரீமேக்தான் மன்னன். பின்னர் மன்னன் காரணமொகடு என்ற பெயரில் தெலுங்கிலும், வாட்லா என்ற பெயரில் இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது.
தெனாவெட்டான கோடீஸ்வரி விஜயசாந்திக்கு திமிர் அதிகம். தானே எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். தனக்கு கணவனாக வருகிறவனும் தனக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டும் என்பவர். மும்பையில் ஒரு பெரிய நிறுவனத்தில் என்ஜினீயராக இருக்கும் ரஜினி, தாயை உடன் இருந்து கவனிக்க வேண்டும் என்பதற்காக உள்ளூரிலேயே வேலை தேடுகிறார். விஜயசாந்தியின் கம்பெனியில் ஒரு சாதாரண மெக்கானிக்காக வேலைக்கு சேர்கிறார். வேலைக்கு சென்ற இடத்தில் விஜயசாந்தியின் செகரட்டரி குஷ்புவை காதலிக்கிறார்.
கம்பெனி தொழிற்சங்க தலைவராகும் ரஜினி தொழிலாளர்களுக்காக முதலாளி விஜயசாந்தியை எதிர்க்கிறார். தன்னை எதிர்க்கும் ரஜினியை தடுக்க அவரையே தனது கணவராக்கி அடிமையாக்க நினைக்கிறார். அவருக்கு கணவராகும் ரஜினி அவரது கொட்டத்தை அடக்குகிற கதை. சூப்பர் ஸ்டார் ரஜினி பெண் வில்லிகளுடன் மோதிய அத்தனை படங்களும் ஹிட்டாகும். அந்த வரிசையில் இந்தப் படமும் ஹிட்டானது.
இப்போது இந்தப் படத்தை ரீ-மேக் செய்ய இயக்க பி.வாசு முடிவு செய்திருக்கிறார். இந்த காலத்துக்கேற்ப சில மாற்றங்களை செய்து ஸ்கிரிப்ட் பணிகளை முடித்து விட்டார். தற்போது வாசு, ராகவா லாரன்ஸ் நடிப்பில் சிவலிங்கா படத்தை இயக்கி வருகிறார். அவரிடம் வாசு கதை சொல்லி அவரும் ஓகே சொல்லிவிட்டார். ரஜினி கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிப்பது முடிவாகி இருக்கிறது. விஜயசாந்தி கேரக்டரில் நயன்தாராவும், குஷ்பு கேரக்டரில் நித்யா மேனனும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஒருவேளை நயன்தாரா இல்லாவிட்டால் த்ரிஷா நடிக்கலாம் என்று தெரிகிறது.