'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனுஷை நாயகனாக வைத்து கெளதம்மேனன் இயக்கி வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் மேகா ஆகாஷ். இவர், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நாயகனாக நடித்த முதல் படமான ஒரு பக்க கதையில் நாயகியாக அறிமுகமானவர். ஆனால், அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், கெளதம் மேனனின் பார்வையில் பட்டு தனுசுக்கு ஜோடியாகி விட்டார் மேகா ஆகாஷ்.
இந்த படத்தில் தனுஷின் காதலியாக நடித்துள்ள மேகா ஆகாஷ், ரொமான்ஸ் காட்சிகளில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். பாடல் காட்சிகளில் அவரை அழகியலுடன் படமாக்கியிருக்கிறாராம் கெளதம்மேனன். அதனால் இந்த படம் தனக்கு பெரிய ஓப்பனிங்கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கும் மேகா ஆகாஷ், கடந்த மாதம் வெளியான கெளதம்மேனனின் அச்சம் என்து மடமையடா படத்தில் நாயகியாக நடித்த மஞ்சிமா மோகனுக்கு தற்போது கோலிவுட்டில் கிடைத்திருக்கும் வரவேற்பை போன்று தனக்கும் இந்த படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்களின் படங்கள் கமிட்டாகும் என்று பெரிய நம்பிக்கையில் காத்திருக்கிறார்.