ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மெல்லிசை. தற்போது இந்தப்ப படத்திற்கு புரியாத புதிர் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயத்ரி ஹீரோயின். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி உள்ள இந்தப் படத்திற்கு சி.எஸ்.சாம் இசை அமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெபேல் ஸ்டூடியோ சார்பில் தீபன் பூபதி, ரத்தேஷ் வேல் தயாரித்திருந்தனர். சில காரணங்களால் கடந்த இரண்டு வருடங்களாக வெளிவராமல் இருந்த இந்தப் படத்தை தற்போது ஜே.எஸ்.கே.பிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.எஸ்.சதீஷ்குமார் வாங்கி வெளியிடுகிறார்.
தற்போது இந்தப் படம் தெலுங்கிலும் வெளிவருகிறது. தெலுங்கில் பீட்சா 2 என்ற பெயர் வைத்திருக்கிறார்கள். இதன் தெலுங்கு உரிமத்தை டி.வி.சினி கிரியேஷன் சார்பில் டி.வெங்கடேஷ் வாங்கி உள்ளார். மாருதி மற்றும் சுதர்சன ரெட்டியுடன் இணைந்து வெளியிடுகிறார். அண்மையில் ஐதராபாத்தில் நடந்த இதன் தெலுங்கு பாடல்கள் வெளியீட்டு விழாவில் நடிகை காயத்ரி உள்ளிட்ட தெலுங்கு திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.