இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல மலையாள இயக்குநர் லோகிததாஸின் சிஷ்யரும், இலக்கியவாதியுமான மீரா கதிரவன் இயக்கிய முதல் படம் - 'அவள் பெயர் தமிழரசி'. வணிகரீதியில் தோல்வியடைந்தாலும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது இந்தப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா கதிரவன் இயக்கி வரும் படம் 'விழித்திரு'. கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தம்பி ராமையா, எஸ்.பி.பி.சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா ஃபெர்ணாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமானதால் படத்தின் பட்ஜெட்டும் எகிறிவிட்டது. யெஸ்.. விழித்திரு படத்தின் பட்ஜெட் 4.5 கோடியாம். பல மாதங்கள் கிடப்பில் கிடந்ததால் வட்டியும் சேர்ந்து கொள்ள சுமார் 6 கோடியை தொட்டுவிட்டது பட்ஜெட். இந்த படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் என்பவர் இசை அமைக்கிறார்.
இந்த படத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாடக் கூடிய வகையில் ஒரு பாடல் இடம் பெறுகிறது. STAY AWAKE என்று துவங்கும் இந்த பாடலை 25-11-16 அன்று துபாயில் நடைபெறவிருக்கும் அபிராமி ராமநாதனின் 'அபிராமி மெகாமால் விருது' வழங்கும் விழாவில் வெளியிடவிருக்கின்றனர். இதற்காக 'விழித்திரு' படக்குழுவின் துபாய் பயணமாகியுள்ளனர். அனேகமாக 'விழித்திரு' படத்தை அபிராமி ராமநாதன் வெளியிட வாய்ப்பிருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.