ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெண்ணிலா கபடி குழு படம் என்ற யதார்த்த சினிமாவை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர் சுசீந்திரன். அதன்பிறகு அவர் கமர்ஷியலாக உருவாக்கிய ராஜபாட்டை, பாயும் புலி போன்ற படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தநிலையில், மீண்டும் தனது யதார்த்த பாணிக்குத் திரும்ப முடிவு செய்தார் இயக்குனர் சுசீந்திரன். அதன்படி அவர் இயக்கியிருக்கும் படம்தான் 'மாவீரன் கிட்டு'.
80களில் நடந்த உண்மைச்சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறாராம். விஷ்ணு விஷால் ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கும் இந்தப்படத்தில் பார்த்திபன் வில்லனாக நடிக்கிறார். காமெடிக்கு சூரி. மாவீரன் கிட்டு படத்தின் டீஸர், டிரைலருக்கு மட்டுமல்ல, இமானின் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இப்படம் சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. மாவீரன் கிட்டு படத்தைப் பார்த்த அதிகாரிகள், படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். 'மாவீரன் கிட்டு' படத்துக்கு சென்சார் சர்ட்டிபிகேட் கிடைத்த உடனேயே வரும் டிசம்பர் 2ஆம் தேதி படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.