மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இயக்குனர் விஜய்யை விட்டுப் பிரிந்த பிறகு மீண்டும் நடிப்பில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் அமலா பால். சில வாரங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் அவருடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தான் இன்னும் அப்படியே தான் இருக்கிறேன் என்பதை வெளியுலகிற்கு மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
தற்போது புதிய படங்களில் நடிக்க அமலா பாலுக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். ஏற்கெனவே தனுஷ் நடிக்கும் 'வட சென்னை' படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமான அமலா பால் தற்போது தனுஷ் நடிக்க உள்ள 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஒரே சமயத்தில் தனுஷுடன் இரண்டு படங்களில் நடிக்கும் அமலா பாலைப் பார்த்து மற்ற நடிகைகள் பொறாமையில் உள்ளார்கள். 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் முதல் பாகத்திலும் அமலா பால் தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படங்களைத் தவிர 'திருட்டுப் பயலே' படத்திலும் கன்னடத்தில் சுதீப்புடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். ஏற்கெனவே தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள அமலா பால் அங்கும் தன்னுடைய பழைய நண்பர்களைத் தொடர்பு கொண்டு தன்னுடைய நடிப்பார்வத்தை வெளிப்படுத்தி வருகிறாராம். அதற்கும் விரைவில் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
திருமணமாகி பிரிந்த ஒரு நடிகைக்குத் திரையுலகில் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து மற்ற திருமணமாகாத நடிகைகள் ஆச்சரியப்பட்டுப் போயுள்ளார்களாம். எல்லாவற்றிற்கும் ஒரு 'ராசி' வேண்டும் என்பது சொல்லியா தெரிய வேண்டும். அந்த ராசி ஏன் ஒரு நடிகராகக் கூட இருக்கக் கூடாது.