இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சூதுகவ்வும், பீட்சா-2, தெகிடி, 144 போன்ற படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். பிரியதர்ஷனின் சில சமயங்களில் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருப்பவர், கூட்டத்தில் ஒருத்தன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஞான வேல் இயக்கியுள்ள இந்த படத்தின் நாயகியாக பிரியாஆனந்த் நடிக்க, காமெடியனாக பாலசரவணன் நடித்துள்ளார்.
பெரும்பாலும் படங்களுக்கு யு சான்றிதழ் வாங்குவதற்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தணிக்கைக்குழுவிடம் போராடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த படத்திற்கு கேட்காமலேயே தணிக்கைக்குழுவினர் யு சான்றிதழ் கொடுத்து விட்டார்களாம். காரணம், வாழ்க்கையில் வறுமைக்கோட்டுக்கு கீழிருந்த ஒருவன், ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் வீணடிக்கப்படும் உணவுகளை எடுத்துச்சென்று சாப்பாட்டுக்கே வழி இல்லாதவர்களுக்கு கொடுக்கும் கதையாம்.
மேலும், இந்த படத்தின் முடிவில் இதுபோன்ற சமூக நோக்கமுள்ள செயல்களில் ஈடுபட்டு வரும் சில சமூக ஆர்வலர்களையும் பட்டியலிட்டு காண்பித்து அவர் களுக்கு பெருமை செய்யும் வகையில் காட்சிகள் அமைத்துள்ளார்களாம். இந்த நல்ல நோக்கத்தை பாராட்டியே இந்த படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளதாம் தணிக்கைக்குழு.