'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
குக்கூ ராஜூமுருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அப்படத்தில் குரு சோமசுந்தரத்தின் மனைவியாக நடித்த அவர், அதிகமாக பேசாமலேயே பர்பாமென்ஸ் கொடுத்தார். அதன்காரணமாக முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொண்டார் ரம்யா பாண்டியன். அதை யடுத்து இப்போது ரெட்டைச்சுழி தாமிரா இயக்கத்தில் சமுத்திரகனி நாயகனாக நடித்து வரும் ஆண்தேவதை படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
முதல் படத்தைப்போலவே இந்த படத்திலும் மனைவி வேடத்திலேயே நடிக்கிறார் ரம்யா பாண்டியன். கணவன்-மனைவி பிரச்சினை அடிப்படையில் இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடித்துக்கொண்டே அடுத்தபடியாக புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமடைந்துள்ளார் ரம்யா. முக்கியமாக, அடுத்து முன்னணி இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாடி கமர்சியல் வட்டத்திற்குள் சென்று விட வேண்டும் என்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், புதிதாக சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும், அந்த படங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறுகிறார்கள்.