Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்சேதுபதி, ஜி.வி.பிரகாஷை இயக்கும் ஈட்டி ரவி அரசு!

15 நவ, 2016 - 11:59 IST
எழுத்தின் அளவு:
Ravi-Arasu-to-direct-GV-Prakash-and-Vijaysethupathi

அதர்வா நாயகனாக நடித்த ஈட்டி படத்தை இயக்கியவர் ரவி அரசு. அதர்வாவுடன் ஸ்ரீதிவ்யா, ஜெயப்பிரகாஷ், நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. அதோடு தொடர் தோல்விப்படங்களை கொடுத்து வந்த அதர்வாவுக்கு இந்த படம் பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அந்த ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு, தற்போது ஜி.வி.பிரகாஷ், விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.


இதில், ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை பொங்கலுக்கு பிறகு தொடங்குகிறார். இதுவரை ரொமான்ஸ், காமெடி கதைகளில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்தில் முதன்முறையாக ஆக்சன் கதையில் நடிக்கிறார். அந்த படத்தை அடுத்து விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை 2017ம் ஆண்டு அக்டோபரில் இயக்குகிறார் ரவி அரசு. அந்த படமும் ஆக்சன் கதைதானாம். இந்த இரண்டு படங்களையுமே ரவி அரசு இயக்குவது உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், ஜி.வி.பிரகாஷை இயக்கும் படத்திற்கான நடிகர் - நடிகைகள், டெக்னீசியன் தேர்வில் தற்போது அவர் தீவிரமடைந்துள்ளார்.


மேலும், ஈட்டி படம் வசூல் ரீதியாக விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்ததோடு, சமீபகாலமாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படங்களும் விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்து வருவதால், ஈட்டியைத் தொடர்ந்து தான் இயக்கும் புதிய படத்தையும் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுக்கும் வகையில், பக்கா கமர்சியலான கதையை ரெடி பண்ணியிருக்கிறாராம் ரவி அரசு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in