தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சந்தீப் கிஷன் தெலுங்கு பையன்தான். ஆனால் பிறந்தது, வளர்ந்தது சென்னையில், படித்தது லயோலாவில். தெலுங்கு படங்களில் அறிமுகமாகி நடித்துக் கொண்டிருந்தவருக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்பது தீராத ஆசை. 3 வருடங்களுக்கு முன்பு யாருடா மகேஷ் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெறாமல் போகவே. தமிழ் சரிப்பட்டு வராது என்று தெலுங்கு பக்கமே ஒதுங்கி விட்டார். தெலுங்கில் பிசியான நடிகர். 20 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.
இப்போது தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கும் மாயவன் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இந்தப் படம் வெளிவராத நிலையிலும் மேலும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சந்தீப்புக்கு தெலுங்கில் ஒரு மார்க்கெட் இருப்பதால் படத்தை தெலுங்கிலும் வெளியிட்டு ஒரு கலெக்ஷன் பார்த்துவிடலாம் என்கிற கணிப்புதான் இதற்கு காரணம்.