Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜி.வி.பிரகாஷ்குமாரை இயக்கும் ‛ஈட்டி' ரவி அரசு

05 நவ, 2016 - 11:55 IST
எழுத்தின் அளவு:
Ravi-Arasu-to-direct-GV-Prakash-kumar

கேரியரிலேயே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது ரவி அரசு இயக்கிய 'ஈட்டி' படம். மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அப்போது வெளியான படங்களிலேயே கமர்ஷியலாக வெற்றி பெற்றது ஈட்டி படம்தான் என்று விநியோகஸ்தர்களே தெரிவித்தனர். அதர்வாவை வைத்து 'ஈட்டி'யை வெற்றிப்படமாகக் கொடுத்த ரவி அரசுவின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டினார்கள்.


இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் ரவி அரசு. சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'றெக்க' படத்தை தயாரித்த நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்குகிறது.


தற்போது இதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இருக்கிறார் ரவி அரசு. இந்த வேலைகள் முடிந்ததும் இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வில் ஈடுபட உள்ளார். இந்த படத்தை முடித்த பிறகுதான் 'ஈட்டி' படத்தின் தெலுங்கு ரீ-மேக்கை இயக்க இருக்கிறாராம் ரவி அரசு. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை முடித்த பிறகு விஜய்சேதுபதியை வைத்தும் ஒரு படத்தை இயக்க உள்ளார் ரவி அரசு!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in