ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன அமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான லாரன்ஸ், ரஜினியை போன்று ராகவேந்திரரின் தீவிர பக்தர். இவர் நடித்து வெளியான ‛காஞ்சனா 2 படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை புரிந்தது. தற்போது, மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்து வருகிறார் லாரன்ஸ்.
எப்போதுமே தன்னை ரஜினி ரசிகராக காட்டிக்கொள்ளும் லாரன்ஸ், இப்போது முதன்முறையாக அவரது படம் ஒன்றின் ரீ-மேக்கில் நடிக்க உள்ளார். ரஜினி, மூன்று வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட்டான ‛மூன்று முகம் படத்தின் ரீ-மேக்கில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை, நடிகர், நடிகையர், தொழில்நுட்ப தேர்வு நடந்து வருகிறது. ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் சார்பில் ராகவா லாரன்ஸ் பிரமாண்டமாய் தயாரிக்க உள்ளார்.
‛மூன்று முகம் படம் 1982-ம் ஆண்டு சத்யா மூவிஸ் பேனரில், ஏ.ஜகன்நாதன் இயக்கத்தில் வெளியானது. ரஜினி முதன்முறையாக மூன்று வேடத்தில் நடித்தார். அவருடன் ராதிகா, செந்தாமரை, சில்க் ஸ்மிதா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரஜினி நடித்த மூன்று ரோல்களில் போலீஸ் ரோலான அலெக்ஸ் பாண்டியன் ரோலும், அவர் பேசும் பஞ்ச் டயலாக்குகளும் மிகவும் பிரபலமானது.