தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2016ம் ஆண்டின் முக்கிய வெற்றிப் படங்களில் 'கபாலி, தெறி, ரெமோ' ஆகிய மூன்று படங்களை மட்டுமே பலர் குறிப்பிடுகிறார்கள். அதே சமயம், குறைந்த முதலீட்டில் அதிகப்படியான லாபத்தைக் கொடுத்த படம் 'பிச்சைக்காரன்' என்பதை பலரும் சொல்ல மறந்துவிடுகிறார்கள். 'கபாலி, தெறி,' ஆகிய இரண்டு படங்கள் 100 கோடி ரூபாயும், அதற்கு மேலும் செலவு செய்து எடுக்கப்பட்டு, மேலும் சில கோடிகள் செலவு செய்து விளம்பரப்படுத்தப்பட்ட படங்கள். 'ரெமோ' படம் சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாராகி, மேலும் சில கோடிகள் விளம்பரப்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற படம். ஆனால், பிச்சைக்காரன் படம் அப்படியில்லை.
'பிச்சைக்காரன்' படம் சுமார் 10 கோடி ரூபாய்க்கும் குறைவான செலவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட படம். இந்தப் படம் தமிழில் வெளிவந்த முதல் நாளிலேயே பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. தொடர்ந்து தமிழிலும் வெற்றிகரமாக ஓடி சுமார் 15 கோடி ரூபாய் வரை வசூலித்தது. அதன் பின் இந்தப் படத்தை தெலுங்கில் டப்பிங் செய்வதற்காக வெறும் 50 லட்ச ரூபாய் மட்டுமே உரிமை கொடுத்து வாங்கினார்களாம். மேலும் சில லட்சங்களை மட்டுமே விளம்பரத்திற்காக செலவு செய்தார்கள். ஆனால், இந்தப் படம் தெலுங்கில் எவ்வளவு தெரியுமா வசூலித்துள்ளது. தமிழில் வசூலான தொகையை விட அதிகம். தெலுங்கில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம். தெலுங்கில் 50 நாட்களைக் கடந்த பின்தான் இந்தப் படத்தை தெலுங்கிலேயே வெளிநாடுகளில் வெளியிட்டுள்ளார்கள். அங்கு சுமார் 2 கோடி ரூபாய் வரை வசூலித்துக் கொடுத்துள்ளது.
தமிழ், தெலுங்கு இரண்டையும் சேர்த்து மொத்தமாக 42 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தயாரிப்புச் செலவுடன் ஒப்பிடும் போது தமிழில் வெளிவந்த இந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் 'பிச்சைக்காரன்' படத்திற்குத்தான் முதலிடத்தைக் கொடுக்க வேண்டும்.