பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் சேதுபதியுடன், டி.ராஜேந்தர் நடிக்கும், கவண் படம் பற்றி, கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. சமீபகாலமாக, ஒருசில படங்களில், பாடல் காட்சிகளில் மட்டுமே பட்டையை கிளப்பிய, டி.ஆர்., இந்த படத்தில், முக்கியமான ரோலில் நடித்துள்ளாராம். அதுவும், விஜய் சேதுபதி, ஹீரோயின் மடோனோ செபாஸ்டின் ஆகியோருடன் இணைந்து, கலக்கலான குத்தாட்டமும் போட்டுள்ளாராம். அதெல்லாம் சரி, கவண் என்ற தலைப்புக்கு என்ன அர்த்தம் என கேட்டால், நீண்ட விளக்கம் தருகிறது, படக்குழு. கவண் என்ற சொல், துாய தமிழ் சொல்; தமிழ் இலக்கிய நுால்களில், இதை பற்றிய குறிப்பு உள்ளது; இலக்கை குறிபார்த்து, கல் எறிய பயன்படுத்தப்பட்ட கருவி தான், கவண்; பேச்சு வழக்கில், இது, உண்டிக்கல் என்றும் அழைக்கப்படுகிறது என, விளக்கம் அளித்துள்ளது, படக்குழு.