குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
சிம்பு இசையமைத்த பல படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. அந்த வகையில், அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அதோடு, என்னாசை மைதிலியே, வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள போன்ற ரீமிக்ஸ் பாடல்களையும் யுவன் இசையில் பாடியிருந்தார் சிம்பு. இந்த நிலையில், ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறகு சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு மீண்டும் இசையமைத்து வருகிறார் யுவன்.
அந்த வகையில், இந்த படத்திற்காக யுவன் இசையில் சிம்பு எழுதி பாடிய, என்னை விட்டு யாரையாச்சும் கல்யாணம் பண்ணிட்டா கொன்னே புடுவேன் கொன்னே புடுவேன் -என்றொரு பாடலை பாடியிருந்தார் சிம்பு. இந்த செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த படத்திற்காக இன்னொரு பழைய சூப்பர் ஹிட் பாடலையும் ரீமிக்ஸ் செய்துள்ள யுவன், அதையும் சிம்புவையே பாட வைத்துள்ளார். அந்த வகையில், இந்த படத்திற்காக 9 பாடல்களை கம்போஸ் செய்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜ. அப்படி அவர் உருவாக்கியுள்ள அனைத்து பாடல்களும் டிரன்டிங் செய்யக்கூடியதாக இருக் கும் என்கிறார்கள்.